பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Saturday, July 17, 2010

கவிதையும் காதலும்ஒரு விதை

கவிதையாவதைப்

போலத்தான்

ஒரு பார்வை

காதலாகிறது!எழுத்து

ஒவ்வொன்றும்

எங்கிருந்தோ வந்து

காகிதத்தில்

விழுவது போல்

எங்கிருந்தோ

புறப்பட்டு

இதயம் நகர்கிறது

காதல் உணர்வு!ஒவ்வொரு வாக்கியமும்

படிக்கப் படிக்க

கவிதா உலகுக்கு

இடம் பெயரும் ரசிகன்போல்

காதலின்

ஒவ்வொரு

படிக்கட்டிலும்

இடறி இடறி

சொர்க்கம் நோக்கி

புலம் பெயருகின்றனர்

காதலர்கள்!
கவிதையில்

புதுமையும் மரபும்

கலந்தே குழைவதைப்போல்

காதலும் கூட

முரணின் உருவம்தான்!கவிதை

ரசிக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை

வியக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை வெட்கப்படும்!

காதலும் தான்!

கவிதை துக்கப்படும்!

காதலும்தான்!ஆனாலும்

கவிதையும் காதலும்

வேறு வேறுதான்!


கவிதை படித்தால்

முடிந்துவிடும்!

 காதலித்தால்

காதல் முடியுமா.........?

6 comments:

ஷஹி said...

எல்லாக் காதலும் அமரக் காதல் அல்ல...
சிலது தொடரும் பலது முடியும்.
கவிதை முடியாது....முற்றுப் புள்ளியில் தொடங்கும் கவிதைகள் பல....

Abhi said...

அப்படியா?

rk guru said...

சூப்பர் கவிதை .......வாழ்த்துகள்

Kapilan said...

அருமை ...

Banumathi said...

MOONDRAM KONAM IS A KALEIDOSCOPE. Ovvoru konathilum oru puthia kalaivannam kattukirathu.
AGRI SIVA

Abhi said...

நன்றி rk guru, கபிலன் மற்றும் பானுமதி!

Post a Comment