பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Friday, July 9, 2010

காணாமல் போன கனவுகள்காணாமல் போன

என் கனவுகளை

யாரேனும்

கண்டெடுத்தால்

அதை

கண்ட இடத்திலேயே

போட்டு விடுங்கள்!

அவை

திருவிழாவில்

தொலைந்த குழநதைபோல்

பெற்ற என்னிடம்

வரத்  துடிக்கும்!

ஆனாலும்

நீங்கள்

அவற்றை

என்னிடம்

சேர்க்காதீர்கள்!

நான்

நிஜமாக்க

முடியாத

கனவுகள் எல்லாம்

மனைவியாக்காத

காதலிகள் போல!

உங்களிடம்

குழந்தை போல்

அழும் கனவுகள்

என்னிடம்

மறந்த காதலியாய்

கேள்வி கேட்கும்!

அதனால்...

கனவுகள்

தொலைந்தே போகட்டும்!

கனவுகளை

கண்ட

இடத்திலேயே

விட்டு விடுங்கள்!

1 comments:

shahidha said...

ஒட்டியிருக்கும் கனவுகளை உரித்துப்....
தைத்துக் கிடப்பதை தவிர்ப்பது எப்படி?....
"மனைவியாக்காத ........."
வரிகள் அருமை.....

Post a Comment