
சொன்னதையே
சொல்லிக் கொண்டிருந்த
குழந்தையும்...
சொல்லாததை
கடைசி வரை
சொல்லாத
பெரிசுகளும்
சொல்லக் கூடாததை
சொல்லி...
சொல்ல வேண்டியதை மறந்த
இளசுகளும்....
இப்படி
சொன்னதும்
சொல்லாததுமாய்
சொல்லாமலே
ஓடிய நொடிகளில்
கரைந்தது
சொல்லிக் கொள்ளும்படியான
விசேஷம்
ஏதுமற்ற வாழ்க்கை!
1 comments:
வாழ்வின் அர்த்தம் அல்லது அர்த்தமின்மையின்
யதார்த்தமான பதிவு...
Post a Comment