பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Thursday, June 10, 2010

என்ன செய்யப் போகிறேன்!

ஒரு பூ கேட்டாய்!
பூங்கொத்தே கொடுத்தேன்!
ஒரு புடவை கேட்டாய்!
உன் வார்ட்ரோபை நிறைத்தேன்!

எப்போதாவது
நேரம் கிடைத்தால்
செல்ஃபோனில் அழையென்றாய்!
ஆயிரங்களில் பில் கட்டினேன்!
எனக்குப் புரியாத
ஜோக் சொல்லி
புன்னகை செய் எனறாய் - நான்
புரண்டு விழுந்து சிரித்தேன்!

அலுவலகத்தில்
நீ இல்லாத போது
உன் இருக்கையையும்
கொஞ்சம் பார்த்துக் கொள் என்றாய்!
நீ இல்லாத போதும்
நீ இருக்கும் போதும்
என் இருக்கை கூட பாராமல்
உன் இருக்கை மட்டுமே பார்த்தேன்!

கண்ணதாசன் கவிதை
ஒன்றேயொன்று சொல் என்றாய்!
சினிமா பாட்டிலிருந்து
அர்த்தமுள்ள இந்துமதம் வரை
அவரின் உயில் தவிர
அவர் எழுதிய
அனைத்தும் பரிசளித்தேன்!

இப்படி
நீ எதைக் கேட்டாலும்
அதிகமாகத் தந்தே
பழகி விட்டேன்!
இன்று
ஒரே ஒரு
முத்தம் கேட்டிருக்கிறாய்...
என்ன செய்யப் போகிறேன்?!

5 comments:

mathangi said...

nalla vezhai mannum ponnum keytkavay illai aval. un kaathilikku pudavai koduthathaal thaan engalukku nalla pudavai amayavillai poolum!!!!!!

mathangi said...

nalla vezhai unnaval ponnum, mannum keytkavillai! irukira nalla pudavai ellaam nee avalukku koduthuvitathaal engalukku pudavai kidaipathillai poolum!!!!!! manathai laysaaki vitta kavithai. arumai

shahidha said...

மொத்தமாய் கொடுத்து விட வேண்டியது தான் ....
வேறென்ன செய்ய முடியும்?

abhimanyurajarajan said...

nalla advice :-)

abhimanyurajarajan said...

நன்றி மாதங்கி! நல்ல புடவை கிடைக்காவிட்டால் என்ன? அதுதான் சுடிதார் அது இது என்று பெண்களுக்கு நிறைய ஆடை இருக்கிறதே :-) welcome to my site !

Post a Comment