பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Tuesday, June 29, 2010

சும்மா கிடந்த சங்கு

"சும்மா கிடந்த

சங்கை

ஊதிக் கெடுப்பானேன்!"

நண்பன் கேட்டதும்

ஊத வந்தவன்

ஊதாமல் விலகினான்!

கேட்டவனைப் பார்த்து

சங்கு கேட்டது...

" ஊத வேண்டிய

சங்கை

சும்மா கெடுப்பதேன்?

மீட்டாத வீணையென்றால்

வாடும் கூட்டமே!

ஊதாத சங்கு மட்டும்

உமக்கு ஊறுகாயோ?"

1 comments:

shahidha said...

"தத்துவத் தலைவன்".....என்ற பட்டம் தருகிறேன் தங்களுக்கு.....
jokes apart....a really good one....

Post a Comment